டெல்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் விழா, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குழந்தை பருவம் தொடங்கி, அவரது சுதந்திரப் போராட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கும் அருங்காட்சியகம் டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். ஆசாத் கி தீவானே என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சுதந்திரப் போராட்டக் காலத்தை விளக்கும் ஓவியங்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
Showing posts with label CURRENT AFFAIRS. Show all posts

Wednesday, 3 June 2020
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம்
Tuesday, 2 June 2020
Kalvisolai TNPSC Online Test 2 | நடப்பு நிகழ்வுகள் 2020
1. எந்த நகரில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு அடைவதற்கான கூட்டு பிராந்திய மையம் அமைக்கப்பட்டுள்ளது?
(A) போர்ட் பிளேர்
(B) சென்னை
(C) போபால்
(D) அமிர்தசரஸ்
2. எந்த மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையம் அமைக்கப்பட உள்ளது?
(A) ராஜஸ்தான்
(B) ஹரியானா
(C) குஜராத்
(D) சட்டீஸ்கர்
3. தரஞ்சித் சிங் சந்து எந்த நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்?
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) கனடா
(D) ரஷ்யா
4. இந்தியாவில் உள்ள எத்தனை ஈரநிலங்கள் ராம்சார் தளம் பட்டியலில் உள்ளன?
(A) 34
(B) 35
(C) 36
(D) 37
5. இவற்றில் எந்த நகரில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?
(A) ராஞ்சி
(B) கொச்சி
(C) மிட்னாபூர்
(D) கவுகாத்தி
6. உலக ஈரநிலங்கள் தினம் கடைப்பிடிக்கப் படுவது?
(A) பிப்ரவரி 1
(B) பிப்ரவரி 2
(C) பிப்ரவரி 3
(D) பிப்ரவரி 4
7. SAMPRITI-IX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியாகும்?
(A) இலங்கை
(B) நேபாளம்
(C) வங்காளதேசம்
(D) மாலத்தீவு
8. 17 வயதிற்குட்பட்ட65-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் எந்த நகரில் நடைபெற உள்ளது?
(A) அகர்தலா
(B) புனே
(C) நாக்பூர்
(D) லூதியானா
9. முதல் பழ ரயில் இந்திய ரயில்வேயால் பின் வரும் எந்த மாநிலத்திலிருந்து தொடங்கப்பட்டது?
(A) கர்நாடகா
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) ஆந்திரபிரதேசம்
10. சிறகுகள் இந்தியா என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது?
(A) ஹைதராபாத்
(B) கொச்சி
(C) சென்னை
(D) பெங்களூரு
11. இந்தியாவில் முதன்முறையாக விவசாய நில குத்தகை கொள்கையை எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?
(A) உத்திரபிரதேசம்
(B) உத்தரகாண்ட்
(C) ஒடிசா
(D) கர்நாடகம்
12. எந்த மாநில அரசு யாஷாஷ் வினி திட்டத்தை தொடங்கியுள்ளது?
(A) பஞ்சாப்
(B) குஜராத்
(C) கோவா
(D) பீகார்
13. வினய் மோகன் ருவாத்ரா எந்த நாட்டுக் கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
(A) நேபாளம்
(B) சீனா
(C) பிரான்ஸ்
(D) இலங்கை
14. பொலிவுறு நகரங்களுக்கான 3-வது உச்சி மாநாடு 2020 எங்கு நடைபெற்றது?
(A) சென்னை
(B) விசாகப்பட்டினம்
(C) கொச்சி
(D) பெங்களூரு
15. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே முதலிடம் பெற்ற மாநகராட்சி?
(A) சென்னை
(B) கட்டாக்
(C) வேலூர்
(D) வாரணாசி
16. பிரிட்டன் வெளியேறிய பின்னர் தற்போது ஐரோப்பிய ஒன்றியம் அதன் தொகுதியில் எத்தனை நாடுகளை கொண்டுள்ளது?
(A) 26
(B) 27
(C) 28
(D) 29
17. பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 -இன் படி எந்த மாநிலத்தில் மலிவான சைவ உணவு கிடைக்கப்பெறுகிறது?
(A) ஜார்க்கண்ட்
(B) கேரளா
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு
18. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த உலகின் முதல் காதுகேளாத பெண்மணி மோ ஓ பிரயன் எந்த நாட்டை சேர்ந்தவர்?
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) கனடா
(D) ஸ்பெயின்
19. இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற தொழில் நுட்ப விழா அந்த பிரக்னியா 2020 எங்கு நடைபெற்றது?
(A) கேரளா
(B) தெலுங்கானா
(C) தமிழ்நாடு
(D) ஒடிசா
20. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவை சிறப்பாக செயல்படுத்தி முதலிடம் பிடித்த மாநிலம்?
(A) மத்திய பிரதேசம்
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) அசாம்
21. வர்தவன் துறைமுகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது?
(A) மகாராஷ்டிரா
(B) கேரளா
(C) மேற்கு வங்கம்
(D) கர்நாடகம்
22. IRCTC-இன் மூன்றாவது தனியார் ரயில் சேவை வாரணாசிக்கும் எந்த இந்திய நகரத்துக்கும் இடையே இயக்கப்பட வுள்ளது?
(A) போபால்
(B) நாக்பூர்
(C) இந்தூர்
(D) புனே
23. அரசின் பல்வேறு திட்டங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்ட மான ஜனசேவகாவை தொடங்கியுள்ள மாநிலம்?
(A) குஜராத்
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) ஒடிசா
24. 15-வது கிழக்கு ஆசிய மாநாடு 2020 பின் வரும் எந்த இந்திய நகரில் நடைபெற்றது?
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) அகமதாபாத்
(D) கொச்சி
25. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீடு 2020-இல் இந்தியாவின் தரநிலை?
(A) 36
(B) 38
(C) 40
(D) 42
26. அடல் கண்டுபிடிப்பு திட்டம் பின்வரும் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
(A) நிதி அமைச்சகம்
(B) நிடி ஆயோக்
(C) அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்
(D) இஸ்ரோ
27. 35 - வது தேசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
(A) ராஞ்சி
(B) புனே
(C) கட்டாக்
(D) கொல்கத்தா
28. ஹெம்பல் உலக கோப்பை படகு போட்டி எங்கு நடைபெற்றது?
(A) அமெரிக்கா
(B) கனடா
(C) பிரான்ஸ்
(D) ஸ்பெயின்
29. தமிழகத்தின் எந்த பகுதியில் புதிய தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?
(A) கீழடி
(B) ஆதிச்சநல்லூர்
(C) வடலூர்
(D) பூம்புகார்
30. கோ-6 என்ற சிறிய வெங்காய ரகத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) குஜராத்
31. எந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
(A) 2022
(B) 2023
(C) 2024
(D) 2025
32. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழகத்தின் முதல் மாவட்டம்?
(A) தென்காசி
(B) கடலூர்
(C) வேலூர்
(D) மதுரை
33. IMO 2020 என்பது பின்வரும் எதற்கான புதிய விதிகள்?
(A) விமானங்கள்
(B) கப்பல்கள்
(C) இரு சக்கர வாகனங்கள்
(D) நான்கு சக்கர வாகனங்கள்
34. கே. ஜெனிதா ஆண்டோ தொடர்புடைய விளையாட்டு?
(A) கபடி
(B) நீச்சல்
(C) செஸ்
(D) கிரிக்கெட்
35. இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் மேலாண்மை கழகம் எங்கு உள்ளது?
(A) டெல்லி
(B) மும்பை
(C) கொல்கத்தா
(D) சென்னை
36. நாட்டின் 13-வது பெரிய துறைமுகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
(A) காண்ட்லா
(B) ரத்னகிரி
(C) வாதவான்
(D) பால்கர்
37. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை பட்டியல்-2020 -இல் இந்தியாவின் தரநிலை ?
(A) 36
(B) 40
(C) 46
(D) 50
38. தமிழக அரசின் 2020-21 -ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் எப்போது தாக்கல் செய்யப்பட்டது?
(A) பிப்ரவரி 8
(B) பிப்ரவரி 10
(C) பிப்ரவரி 14
(D) பிப்ரவரி 16
39. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது?
(A) ரஷ்யா
(B) சீனா
(C) அமெரிக்கா
(D) தாய்லாந்து
40. இவற்றில் எந்த நாடு யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது?
(A) நமீபியா
(B) தன்சானியா
(C) மடகாஸ்கர்
(D) போட்ஸ்வானா
41. உலக அளவில் எஃகு உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடு?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) அமெரிக்கா
42. குடும்ப ஸ்ரீ ஓட்டல்கள் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) ஒடிசா
43. எந்த நாடு சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பு எனும் அமைப்பை தொடங்கியுள்ளது?
(A) இஸ்ரேல்
(B) அமெரிக்கா
(C) கனடா
(D) ரஷ்யா
44. எந்த மாநிலத்தில் திஷா காவல்நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன?
(A) ஹரியானா
(B) பீகார்
(C) கர்நாடகா
(D) ஆந்திர பிரதேசம்
45. தேசிய அளவிலான சீனியர் ராக்கிட் பால் போட்டியின் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
(A) தமிழ்நாடு
(B) பஞ்சாப்
(C) கர்நாடகா
(D) கேரளா
46. மத்திய அரசு தமிழகத்தின் எந்த நகரத்தை தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக அறிவித்துள்ளது?
(A) திருப்பூர்
(B) செங்கோட்டை
(C) பொள்ளாச்சி
(D) உசிலம்பட்டி
47. சிறப்பாக செயல்படும் 20-ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?
(A) அகமதாபாத்
(B) வாரணாசி
(C) திருப்பூர்
(D) வேலூர்
48. பார்த் என்ற துப்பாக்கி சூடு லொக்கேட்டரை கண்டுபிடித்துள்ள நாடு?
(A) சீனா
(B) இந்தியா
(C) தென்கொரியா
(D) இலங்கை
49. எங்கு நாட்டிலேயே முதல் முறை யாக மனிதக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது?
(A) நீலகிரி
(B) கடப்பா
(C) ஆலப்புழா
(D) சண்டிகர்
50. 2020-ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) நைரோபி
(B) ஒட்டாவா
(C) அடிஸ் அபாபா
(D) டர்பன்
(A) போர்ட் பிளேர்
(B) சென்னை
(C) போபால்
(D) அமிர்தசரஸ்
CLICK BUTTON.....
ANSWER :
(A)
போர்ட் பிளேர்
(A) ராஜஸ்தான்
(B) ஹரியானா
(C) குஜராத்
(D) சட்டீஸ்கர்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
குஜராத்
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) கனடா
(D) ரஷ்யா
CLICK BUTTON.....
ANSWER :
(A)
அமெரிக்கா
(A) 34
(B) 35
(C) 36
(D) 37
CLICK BUTTON.....
ANSWER :
(D)
37
(A) ராஞ்சி
(B) கொச்சி
(C) மிட்னாபூர்
(D) கவுகாத்தி
CLICK BUTTON.....
ANSWER :
(A)
ராஞ்சி
(A) பிப்ரவரி 1
(B) பிப்ரவரி 2
(C) பிப்ரவரி 3
(D) பிப்ரவரி 4
CLICK BUTTON.....
ANSWER :
(B)
பிப்ரவரி 2
(A) இலங்கை
(B) நேபாளம்
(C) வங்காளதேசம்
(D) மாலத்தீவு
CLICK BUTTON.....
ANSWER :
(C)
வங்காளதேசம்
(A) அகர்தலா
(B) புனே
(C) நாக்பூர்
(D) லூதியானா
CLICK BUTTON.....
ANSWER :
(A)
அகர்தலா
(A) கர்நாடகா
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) ஆந்திரபிரதேசம்
CLICK BUTTON.....
ANSWER :
(D)
ஆந்திரபிரதேசம்
(A) ஹைதராபாத்
(B) கொச்சி
(C) சென்னை
(D) பெங்களூரு
CLICK BUTTON.....
ANSWER :
(A)
ஹைதராபாத்
(A) உத்திரபிரதேசம்
(B) உத்தரகாண்ட்
(C) ஒடிசா
(D) கர்நாடகம்
CLICK BUTTON.....
ANSWER :
(B)
உத்தரகாண்ட்
(A) பஞ்சாப்
(B) குஜராத்
(C) கோவா
(D) பீகார்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
கோவா
(A) நேபாளம்
(B) சீனா
(C) பிரான்ஸ்
(D) இலங்கை
CLICK BUTTON.....
ANSWER :
(A)
நேபாளம்
(A) சென்னை
(B) விசாகப்பட்டினம்
(C) கொச்சி
(D) பெங்களூரு
CLICK BUTTON.....
ANSWER :
(B)
விசாகப்பட்டினம்
(A) சென்னை
(B) கட்டாக்
(C) வேலூர்
(D) வாரணாசி
CLICK BUTTON.....
ANSWER :
(C)
வேலூர்
(A) 26
(B) 27
(C) 28
(D) 29
CLICK BUTTON.....
ANSWER :
(B)
27
(A) ஜார்க்கண்ட்
(B) கேரளா
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு
CLICK BUTTON.....
ANSWER :
(A)
ஜார்க்கண்ட்
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) கனடா
(D) ஸ்பெயின்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
கனடா
(A) கேரளா
(B) தெலுங்கானா
(C) தமிழ்நாடு
(D) ஒடிசா
CLICK BUTTON.....
ANSWER :
(B)
தெலுங்கானா
(A) மத்திய பிரதேசம்
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) அசாம்
CLICK BUTTON.....
ANSWER :
(A)
மத்திய பிரதேசம்
(A) மகாராஷ்டிரா
(B) கேரளா
(C) மேற்கு வங்கம்
(D) கர்நாடகம்
CLICK BUTTON.....
ANSWER :
(A)
மகாராஷ்டிரா
(A) போபால்
(B) நாக்பூர்
(C) இந்தூர்
(D) புனே
CLICK BUTTON.....
ANSWER :
(C)
இந்தூர்
(A) குஜராத்
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) ஒடிசா
CLICK BUTTON.....
ANSWER :
(C)
கர்நாடகம்
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) அகமதாபாத்
(D) கொச்சி
CLICK BUTTON.....
ANSWER :
(A)
சென்னை
(A) 36
(B) 38
(C) 40
(D) 42
CLICK BUTTON.....
ANSWER :
(C)
40
(A) நிதி அமைச்சகம்
(B) நிடி ஆயோக்
(C) அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்
(D) இஸ்ரோ
CLICK BUTTON.....
ANSWER :
(B)
நிடி ஆயோக்
(A) ராஞ்சி
(B) புனே
(C) கட்டாக்
(D) கொல்கத்தா
CLICK BUTTON.....
ANSWER :
(D)
கொல்கத்தா
(A) அமெரிக்கா
(B) கனடா
(C) பிரான்ஸ்
(D) ஸ்பெயின்
CLICK BUTTON.....
ANSWER :
(A)
அமெரிக்கா
(A) கீழடி
(B) ஆதிச்சநல்லூர்
(C) வடலூர்
(D) பூம்புகார்
CLICK BUTTON.....
ANSWER :
(B)
ஆதிச்சநல்லூர்
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) குஜராத்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
தமிழ்நாடு
(A) 2022
(B) 2023
(C) 2024
(D) 2025
CLICK BUTTON.....
ANSWER :
(D)
2025
(A) தென்காசி
(B) கடலூர்
(C) வேலூர்
(D) மதுரை
CLICK BUTTON.....
ANSWER :
(A)
தென்காசி
(A) விமானங்கள்
(B) கப்பல்கள்
(C) இரு சக்கர வாகனங்கள்
(D) நான்கு சக்கர வாகனங்கள்
CLICK BUTTON.....
ANSWER :
(B)
கப்பல்கள்
(A) கபடி
(B) நீச்சல்
(C) செஸ்
(D) கிரிக்கெட்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
செஸ்
(A) டெல்லி
(B) மும்பை
(C) கொல்கத்தா
(D) சென்னை
CLICK BUTTON.....
ANSWER :
(A)
டெல்லி
(A) காண்ட்லா
(B) ரத்னகிரி
(C) வாதவான்
(D) பால்கர்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
வாதவான்
(A) 36
(B) 40
(C) 46
(D) 50
CLICK BUTTON.....
ANSWER :
(B)
40
(A) பிப்ரவரி 8
(B) பிப்ரவரி 10
(C) பிப்ரவரி 14
(D) பிப்ரவரி 16
CLICK BUTTON.....
ANSWER :
(C)
பிப்ரவரி 14
(A) ரஷ்யா
(B) சீனா
(C) அமெரிக்கா
(D) தாய்லாந்து
CLICK BUTTON.....
ANSWER :
(A)
ரஷ்யா
(A) நமீபியா
(B) தன்சானியா
(C) மடகாஸ்கர்
(D) போட்ஸ்வானா
CLICK BUTTON.....
ANSWER :
(D)
போட்ஸ்வானா
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) அமெரிக்கா
CLICK BUTTON.....
ANSWER :
(C)
சீனா
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) ஒடிசா
CLICK BUTTON.....
ANSWER :
(A)
கேரளா
(A) இஸ்ரேல்
(B) அமெரிக்கா
(C) கனடா
(D) ரஷ்யா
CLICK BUTTON.....
ANSWER :
(B)
அமெரிக்கா
(A) ஹரியானா
(B) பீகார்
(C) கர்நாடகா
(D) ஆந்திர பிரதேசம்
CLICK BUTTON.....
ANSWER :
(D)
ஆந்திர பிரதேசம்
(A) தமிழ்நாடு
(B) பஞ்சாப்
(C) கர்நாடகா
(D) கேரளா
CLICK BUTTON.....
ANSWER :
(A)
தமிழ்நாடு
(A) திருப்பூர்
(B) செங்கோட்டை
(C) பொள்ளாச்சி
(D) உசிலம்பட்டி
CLICK BUTTON.....
ANSWER :
(C)
பொள்ளாச்சி
(A) அகமதாபாத்
(B) வாரணாசி
(C) திருப்பூர்
(D) வேலூர்
CLICK BUTTON.....
ANSWER :
(A)
அகமதாபாத்
(A) சீனா
(B) இந்தியா
(C) தென்கொரியா
(D) இலங்கை
CLICK BUTTON.....
ANSWER :
(B)
இந்தியா
(A) நீலகிரி
(B) கடப்பா
(C) ஆலப்புழா
(D) சண்டிகர்
CLICK BUTTON.....
ANSWER :
(A)
நீலகிரி
(A) நைரோபி
(B) ஒட்டாவா
(C) அடிஸ் அபாபா
(D) டர்பன்
CLICK BUTTON.....
ANSWER :
(C)
அடிஸ் அபாபா
KALVISOLAI CURRENT AFFAIRS -JUNE 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 2020
ஜூன்.1: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,67,657ஆக உயர்ந்திருக்கிறது. 3,73,961 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 28,47,571 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 1,90,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5,394 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 91,819 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
ஜூன்.1: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் காவலில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை அதிகாரி ஒருவரால் இனவெறி காரணமாக மே 25 அன்று கொல்லப்பட்டார். அவரின் கொலைக்கு எதிராக, அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டங்கள் பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, வாஷிங்டன் உள்ளிட்ட 40 நகரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 2: உலகப் பொருளாதார அமைப்பு (WEF), 2021 ஜனவரியில் இரட்டை மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் இந்த இரட்டை மாநாடு், கோவிட்-19 பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்வகையில், ‘சிறந்த மீளமைத்தல்’ (‘The Great Reset’) என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறவிருக்கிறது. இந்த 51-ம் பொருளாதார மாநாட்டில் 400 நகரங்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் கலந்துகொள்கின்றன.
ஜூன் 3: நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதிலிருந்து ‘பாரத்’ என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, அரசியலமைப்பில் இந்தியா, பாரத் என்றே குறிக்கப்பட்டுள்ளது, அதனால் பெயர் மாற்றத்துக்கு அவசியமில்லை என்று இந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டார். ஆனால், இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 5: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 மார்ச் வரை எந்தப் புதிய திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய திட்டங்களுக்கு அனுமதி கேட்டுக் கோரிக்கைகளை அனுப்ப வேண்டாம் என்று அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருக்கும் நிதியைத் திறம்படப் பயன்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 5: எட்டாம் முறையாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) நிரந்தரமில்லாத உறுப்பினாராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
ஜூன் 17 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. பொதுத்தேர்தலில், இந்தியா எந்த எதிர்ப்பும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லாத உறுப்பினர் இடத்தைப் பிடிப்பதற்காக நடைபெற்ற பிரச்சாரத்தில், இந்தியாவின் முன்னுரிமைகளாக மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, செழிப்பு ஆகியவற்றை முன்வைத்துள்ளார்.
KALVISOLAI CURRENT AFFAIRS -MAY 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - மே 2020
மே.1: 2021-ல் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை நடைபெறுவதாக இருந்த ஏழாம் ‘காமன்வெல்த் யூத் கேம்ஸ்’ போட்டி, 2023-ம் ஆண்டுக்குத் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தேதிகளும் காமன்வெல்த் போட்டிகளின் தேதிகளும் ஒன்றாக இருந்ததால், காமன்வெல்த் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மே.5: கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 27.11 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 15 அன்று 6.74 சதவீதமாக இருந்த நாட்டின் வேலைவாய்ப்பின்மை, மே 3 அன்று 27.11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மே.5: பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் அலி முகம்மது சாகர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர்தஜ் மதானி ஆகியோரின் காவலும் மேலும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
மே.5: தேசிய நுழைவுத் தேர்வுகளான நீட், ஜே.ஈ.ஈ. (மெயின்ஸ்) ஆகியவற்றுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜே.ஈ.ஈ. (மெயின்ஸ்) தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரையும், நீட் தேர்வு ஜூலை 26 அன்று நடைபெறும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜே.ஈ.ஈ. (அட்வான்ஸ்டு) தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே.7: ஈராக்கின் புதிய பிரதமராக முஸ்தஃபா கதிமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஏழு மாதங்களாக அந்நாட்டில் நீடித்துவந்து அரசியல் நெருக்கடி முடிவுக்குவந்துள்ளது. அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களால் 2019 நவம்பரில் அந்நாட்டுப் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான முஸ்தஃபாவை ஈராக் நாடாளுமன்றம் பிரதமராகத் தேர்வுசெய்துள்ளது.
மே 7: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள பகுதியான கோபால்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட ஸ்டைரீன் நச்சு வாயுக் கசிவால் 12 பேர் பலியாகியுள்ளனர். முந்நூறுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மே.12: கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நான்காம் கட்டமாகப் புதிய விதிகளுடன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
மே.12: 2020 - உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையில், 2025-ம் ஆண்டுக்கான ஊட்டச்சத்து இலக்குகளை எட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்தாத நைஜீரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மே.13: 2020 ல், இந்தியாவின் வளர்ச்சி சதவீதம் 1.2 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா.வின் ‘உலகப் பொருளாதாரச் சூழல், வாய்ப்புகள் அறிக்கை’ தெரிவிக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சி 2020-ல் 3.2 சதவீதமாக இருக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி -0.5 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மே.13: கோவிட்-19 வைரஸ் நீண்ட காலத்துக்கு உலகில் நிலைபெற்றிருக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார். இந்த வைரஸைக் கட்டுப்படுத்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், உலக மக்களிடம் இந்த நோய்க்கான எதிர்ப்பாற்றல் உருவாகச் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். ‘எச்.ஐ.வி.' போன்ற பிற வைரஸ்களைப் போல இந்த கரோனா வைரஸும் நம் சமூகங்களில் நிலைபெற்றிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மே.14: இந்திய அரசிடம் தான் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதி கோரியிருந்த இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்மூலம் 28 நாட்களுக்குள் மத்திய அரசிடம் விஜய் மல்லையா ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மல்லையாவின் மீது மத்திய அரசு, பணமோசடி வழக்குப் பதிவுசெய்துள்ளது.
மே.15: உலக வங்கி, கோவிட்-19 சூழலை எதிர்கொள்ள இந்திய மருத்துவத் துறைக்கு ஏற்கெனவே 1 பில்லியன் டாலர் (ரூ.7,549 கோடி) கடன் வழங்கியிருந்தது. தற்போது இரண்டாம் கட்டமாக நாட்டின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மீண்டும் 1 பில்லியன் டாலர் கடனை உலக வங்கி இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
மே.19: ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 9.5 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதவிருக்கின்றனர். பதினொன்றாம் வகுப்புத் தேர்வு ஜூன் 16 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே.20: பிரிட்டனின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அடுத்த கல்வியாண்டு (ஜூன் 2021 வரை) முழுவதும் ஆன்லைனில் மட்டுமே விரிவுரைகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக மார்ச் மாதம் பிரிட்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன.
மே.21: ஐ.நா.வின் 26-ம் பருவநிலை மாநாடு (COP26) பிரிட்டனின் கிளாஸ்கோவில் 2020, நவம்பரில் நடைபெறவிருந்தது. கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இந்த மாநாட்டைத் தள்ளிவைப்பதாக பிரிட்டன் கடந்த மாதம் அறிவித்தது. தற்போது, இந்த மாநாடு 2021-ம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே.21: உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 86 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உம்பன் புயலால் மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் ஒடிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடி, ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மே.22: கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் மார்ச் 23 அன்று உலகளாவிய போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். போர் பதற்றச் சூழல் நிலவும் 19 நாடுகளைச் சேர்ந்த 6,61,000 பேர் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்திருப்பதாக நார்வே அகதிகள் குழு (NRC) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே.25: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 55,02,512 ஆக உயர்ந்திருக்கிறது. 3,46,761 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 23,02,447 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 1,38, 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4021 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 57,720 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
மே.27: கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உருவாகியிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுச் சூழலை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு 750 பில்லியன் யூரோ நிதியை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. 27 நாடுகளை அங்கமாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன், கோவிட்-19 பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மே. 27: இந்தியாவின் ஐந்து வடமாநிலங்களின் வேளாண் நிலங்கள் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசத்தின் வேளாண் பயிர்கள், காய்கறிகளைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கிய வெட்டுக்கிளிகள், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தின் பயிர்களைத் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிப்பதற்கான 15 வகைப் பூச்சிக்கொல்லிகள் பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மே.28: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் கட்டணமின்றிப் போக்குவரத்து வசதிகள், உணவு வசதிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மே.29: சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த அஜித் ஜோகி (74) உடல்நலக் குறைவால் ராய்ப்பூரில் காலமானார். அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக 2000, நவம்பர் 1 முதல் 2003, டிசம்பர் 4 வரை பதவிவகித்துள்ளார்.
மே.29: விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக தியர்ரி டேலபோர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 6 அன்று அவர் பதவியேற்பார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

KALVISOLAI CURRENT AFFAIRS - APRIL 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - ஏப்ரல் 2020
ஏப்ரல் 1: லண்டனில் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெற இருந்த விம்பிள்டன் போட்டி கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1877 முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போதுதான் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்து, 2021 ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை இந்தப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6: கோவிட்-19 காரணமாகக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியத்திலும், இப்பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்திலும் 30 சதவீதம் பிடிக்கப்படும் என்ற அரசாணைக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2020 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை ஓராண்டுக்கு நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8: கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்களுக்குப் பேரிடர் மேலாண்மை நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் தமிழ்நாட்டுக்கு மிகவும் குறைவாக ரூ.510 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டாம் மாநிலமான தமிழ்நாட்டுக்கு இவ்வளவு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியதற்கு என்ன காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏப்ரல் 7: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 25 அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, வேலைவாய்ப்பின்மை 23 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை மார்ச் மாதம் 8.7 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இது 43 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7: கரோனா நோய்த்தொற்று காரணமாக, உலகின் மூன்றாம் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலை 2020 மே 6 வரை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுநோயால், ஜப்பான் பொருளாதாரம் 17 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8: ‘கோவிட்-19 & வேலை உலகம்' என்ற அறிக்கையை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கோவிட்-19 காரணமாக, இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 19.5 கோடி முழுநேரப் பணியிழப்பு இருக்கும் என்றும் இந்த அறிக்கை கணித்துள்ளது. அத்துடன், உலகம் முழுவதும் முறைசாரா துறைகளில் பணியாற்றும் 200 கோடிப் பேர் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9: 2020 ஆசிய பசிபிக் பொருளாதார, சமூக ஆய்வு (ESCAP) அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஐந்து சதவீதமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.
ஏப்ரல் 13: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,53,155 ஆக உயர்ந்திருக்கிறது. 1,14,270 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4,27,801 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 9269 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 333 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 14: கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 3 வரை நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 20 வரை முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். நோய்த்தொற்று புதிதாகப் பரவாத மாவட்டங்களில் ஏப்ரல் 20-க்குப் பிறகு, சில தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 14: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2020-ம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, உலகப் பொருளாதாரம் 1930-களுக்குப் பிறகு எதிர்கொள்ளும் கடுமையான சரிவு இது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வளர்ச்சி சதவீதமும் கடுமையாக இறங்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15: உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். கரோனா நோய்த்தொற்றை உலக சுகாதார நிறுவனம் சரியாகக் கையாளாததாலும், சீனாவுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாலும் அந்த நிறுவனத்துக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 400-500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி-ரூ.3,500 கோடி) உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்தது.
ஏப்ரல் 15: இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டிகள் இந்த ஆண்டு ரத்துசெய்யப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. ஜூன் மாதம் நடத்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள், அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 15: நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்த பிறகு, மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் 170 ‘தீவிர பாதிப்பு’ (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய ஆறு பெருநகரங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, 22 ‘தீவிர பாதிப்பு’ மாவட்டங்களுடன் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 11 மாவட்டங்களுடன் ராஜஸ்தானும், மகாராஷ்டிரமும் இரண்டாம் இடத்தில் உள்ளன.
ஏப்ரல் 16: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.76.80 ஆகச் சரிந்துள்ளது. நாட்டில் கணிசமாக அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்றே இந்தச் சரிவுக்குக் காரணம். அமெரிக்க டாலரை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்வதால், வளர்ந்துவரும் சந்தைகளின் பணமதிப்பு கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.
ஏப்ரல் 20: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,07,562 ஆக உயர்ந்திருக்கிறது. 1,65,082 பேர் பலியாகியிருக்கிறார்கள். 6,25,304 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 17,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 560 பேர் பலியாகியிருக்கிறார்கள். 2,859 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் 20: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் புதிய செயலாளராக கபில் தேவ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை நியமனக் குழு அவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரி, பிப்ரவரி மாதம் ஊழல் ஒழிப்புத் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டதால், புதிய செயலாளராக கபில் தேவ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21: நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குணமடையும் சதவீதம் 17.47 ஆக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 23 மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 61 மாவட்டங்களில் 14 நாட்களாகப் புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21: ஜி20 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்களின் காணொலி வழி மாநாடு சவூதி அரேபியா தலைமையில் நடைபெற்றது. உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றவிருப்பதாக இந்நாடுகள் அறிவித்திருக்கின்றன. இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார். ஊரடங்கின்போது விவசாய நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக மத்திய அரசு எடுத்துவரும் செயல்பாடுகளை இந்த மாநாட்டில் அவர் பகிர்ந்துகொண்டார்.
ஏப்ரல் 22: ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம், உணவு நெருக்கடியைப் பற்றிய நான்காம் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உணவு நெருக்கடி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 26.5 கோடிப் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை உணர்வதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 55 நாடுகளைச் சேர்ந்த 13.5 கோடிப் பேர் கடுமையான உணவு நெருக்கடியில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23: நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவான பதினைந்தாம் நிதி ஆணையம் கோவிட்-19 விளைவுகளைப் பற்றி இரண்டு நாட்கள் காணொலி வழி மாநாட்டில் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், அரசுச் செலவினத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
ஏப்ரல் 27: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29,99,699 ஆக உயர்ந்திருக்கிறது. 2,07,020 பேர் உயிரிழந்திருக் கிறார்கள். 8,81,561 பேர் நோயிலிருந்து மீண்டிருக் கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 27, 892 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். 872 பேர் உயிரிழந் திருக்கிறார்கள். 6,185 பேர் நோயிலிருந்து மீண்டிருக் கிறார்கள்.
ஏப்ரல் 27: இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசல பிரதேசம் ஆகியவற்றில் கோவிட்-19 தொற்று பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று மாநிலங்களான மேகாலயம், அசாம், மிசோரம் ஆகியவற்றில் புதிதாக யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28: கோவிட்-19 காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டி, 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, கோவிட்-19 நோய்த்தொற்று 2021-ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லையென்றால், ஒலிம்பிக் போட்டியை அதன்பிறகும் ஒத்திவைக்கும் திட்டமில்லை என்றும், அது ரத்து செய்யப்படும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28: 2020 நவம்பர் 3 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த மாற்றமுமில்லை என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியில் மாற்றமில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28: உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு 2020 அறிக்கையை (GRID), உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (IDMC) வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் இயற்கைப் பேரிடர்கள், வன்முறைகளால் உலகிலேயே அதிகபட்சமாக 50 லட்சம் இந்தியர்கள் உள்நாட்டுக்குள் இடப்பெயர்வை மேற்கொண்டிருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஏப்ரல் 29: நிதிநிலை வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையில் இந்தியா 53-ம் இடத்தில் இருப்பதாக ‘ஓபன் பட்ஜெட்’ என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 117 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்து பிடித்துள்ளது. சர்வதேச நிதிநிலைக் கூட்டாண்மை (IBP) நடத்திய இந்த ஆய்வில், தென் ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில் ஆகியவை நியூசிலாந்துக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஏப்ரல் 30: கோவில்பட்டியில் தயாரிக்கப்பட்டுவரும் கடலை மிட்டாய், கோரக்பூரில் உருவாக்கப்பட்டுவரும் சுடுமண் சிற்பங்கள், மணிப்பூரின் கறுப்பு அரிசி ஆகியவற்றுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் உற்பத்திசெய்யப்பட்டுவரும் கடலை மிட்டாயின் சிறப்புச் சுவைக்குத் தாமிரபரணி ஆற்று நீரால் அது உருவாக்கப்படுவதுதான் காரணம் என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

KALVISOLAI CURRENT AFFAIRS - MARCH 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - மார்ச் 2020
மார்ச் 1: இலவசப் பொதுத் போக்குவரத்து சேவையை அமல் படுத்தியிருக்கும் உலகின் முதல் நாடாக லக்ஸம்போர்க் மாறியிருக்கிறது. அந்நாடு எதிர்கொண்டுவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும்விதமாக இந்த இலவசப் பொதுப் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 2: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். மனித உரிமை களைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதாவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு ஐ.நா.வுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மார்ச் 3: உலகின் ஜனநாயக நாடுகளில், நிலவும் சுதந்திரத்தில் இந்தியா கடும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அமெரிக்காவில் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பில் ‘2020 உலகின் சுதந்திரம்’ என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான ஜனநாயக நாடுகள் பட்டியலில் கடுமையாகப் பின்தங்கியுள்ள இந்தியா, 83-ம் இடத்தில் உள்ளது. இது கடைசியிலிருந்து ஐந்தாம் இடம். காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-யை நீக்கியது, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, தேசிய குடியுரிமைப் பதிவு போன்றவற்றால் ஜனநாயக நிலையில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து, லக்ஸம்போர்க் ஆகியவை ஜனநாயக நிலையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
மார்ச் 3: 2020-ம் ஆண்டில் உலகின் சிறந்த நூறு பல்கலைக்கழகங்களின் பட்டியலை உலகளாவிய உயர்கல்வி அமைப்பான ‘க்யூஎஸ்’ (Quacquarelli Symonds) வெளியிட்டுள்ளது. இந்தத் தரவரிசைப் பட்டியலுக்காக 1,368 கல்வி நிறுவனங்களின் 48 பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 12 பாடங்களில் சிறந்து விளங்கும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் ஐஐடி மும்பை (44), டெல்லி (47), கரக்பூர் (86), மெட்ராஸ் (88), கான்பூர் (96) ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மார்ச் 4: சந்திரயான்-3 திட்டம் 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் நிறைவேற்றப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். சந்திரயான்-2 திட்டம் 2019 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான்-2-வில் ஏற்பட்ட சிக்கல்கள் சந்திரயான்- 3-ல் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 4: பத்து பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்படும் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 1 அன்று இந்த இணைப்பு அமலுக்கு வந்தபிறகு, நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 12-ஆகக் குறைந்துவிடும். பஞ்சாப் தேசிய வங்கியுடன் ஓரியண்டல் யுனைடட் வங்கியும், கனராவுடன், சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யுனைடட் இந்திய வங்கியுடன், ஆந்திர, கார்பரேட் வங்கிகளும் இணைக்கப்படுகின்றன.
மார்ச் 5: ‘பிபிசி உலக வரலாறுகள் இதழ்’ நடத்திய வாக்கெடுப்பில், 38 சதவீத வாக்குகளைப் பெற்று 19-ம் நூற்றாண்டு சீக்கிய அரசர் மகராஜா ரஞ்சித் சிங், உலகின் சிறந்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1801-1839 வரை, நாற்பது ஆண்டுகள் பஞ்சாப் மாகாணத்தை ஆட்சி செய்துள்ளார். ஆப்ரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் அமில்கர் கப்ரல் இரண்டாம் இடத்தையும், பிரிட்டானிய பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மார்ச் 6: இந்தியாவில் கரோனா வைரஸால் (கோவிட்-19) 39 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸால் இதுவரை உலகில் 98,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,330 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மார்ச் 6: சுற்றுச்சூழல் குற்றங்களில் நாட்டில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் இருப்பதாக ‘2018 தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை’ தெரிவிக்கிறது. 2014-16-ம் ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் குற்றங்களில் 40 சதவீதம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டுகளுக்கு இடையில், நாட்டில் 15,723 சுற்றுச்சூழல் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மார்ச் 9: கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பங்குச்சந்தைச் சரிவின் காரணமாக, ஆசியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். சீன நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா ரூ.3.11 லட்ச கோடி மதிப்புடன் ஆசிய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மார்ச் 9: உலகில் ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாகச் சர்வதேச ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி மையத்தின் (SIPRI) அறிக்கை தெரிவிக்கிறது. உலகின் ஆயுத இறக்குமதியில் சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகியவை முறையே முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்த ஐந்து நாடுகளும் உலகின் 36 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன.
மார்ச். 11: கரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவும் நோயாக (Pandemic) உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் 1,69, 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, கரோனா வைரஸால் 6,520 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை - 77,776. இந்தியாவில் இதுவரை 114 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 12: தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் (NPR) பணிகளை நிறுத்தி வைப்பதாகத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்பத்தில், புதிதாகச் சேர்த்திருக்கும் மூன்று கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும்வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகளை நிறுத்திவைப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 13: பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஏழு மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா விடுதலை செய்யப் பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று அம்மாநில அரசியல் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
மார்ச் 13: மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவும் அவருடைய ஆதரவாளர்களான 22 சட்டபேரவை உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமாவை சட்டப்பேரவையில் மார்ச் 10 அன்று அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் ஆளுநரைச் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மார்ச் 16: நாட்டில் மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சாலை விபத்துகள் பத்து சத வீதம் குறைந்திருப்பதாக மத்திய போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்துகளை ஐம்பது சதவீதம் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 16: தி.மு.க. பொதுச் செய லாளராக 43 ஆண்டுகளாகப் பதவிவகித்த கே. அன்பழகன் மார்ச் 7 அன்று சென்னையில் காலமானார். அதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு மார்ச் 29 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடவுள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதால், தன் பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார்.
மார்ச் 17: தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாட்டின் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்களை அடையாளம் காண்பதற்குத் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 18: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, மணிப்பூர் மாநில அமைச்சர் டி. ஷியாம்குமார் சிங்கைத் தகுதிநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சட்டப்பேரவையில் அவர் நுழைவதற்கும் தடைவிதித்துள்ளது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஷியாம்குமார், பா.ஜ.க. வுக்குத் தாவி நகரத் திட்டமிடல், வனத்துறை அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டார். அவரது தகுதி நீக்கம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் பட்டிருந்தது.
மார்ச்.19: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். அவரது பதவி யேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநிலங்களவையி லிருந்து வெளிநடப்புச் செய்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகோய் பெயரை மாநிலங்களவைக்கு மார்ச் 16 அன்று முன்மொழிந்திருந்தார்.
மார்ச் 19: கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உலகில் 2.5 கோடி பேருடைய வேலைவாய்ப்பு இழக்கப்படும் என்று ஐ.நா. அறிவித் துள்ளது. ஒருங்கிணைக்கப் பட்ட சர்வதேசக் கொள்கையின் மூல மாக மட்டுமே உலக நாடுகள் இந்த வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO), உலக நாடுகள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மார்ச் 20: சர்வதேச மகிழ்ச்சி நாளன்று, உலக மகிழ்ச்சி அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. 156 உலக நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 144-ம் இடத்தில் இருக்கிறது. பின்லாந்தைத் தொடர்ந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகியவை இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
மார்ச் 22: உலகத் தண்ணீர் நாளன்று, 2050-ம் ஆண்டுக்குள் 350 கோடி முதல் 440 கோடி பேருக்குத் தண்ணீர் கிடைப்பது குறையும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இவர்களில் 100 கோடிப் பேர் பெருநகரங்களில் வசிப்பவர்களாக இருப்பார்கள். இன்று உலகில் 220 கோடிப் பேர் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமல் வாழ்ந்துவருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
மார்ச் 23: மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுஹான் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியின் 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த கமல்நாத் மார்ச் 20 அன்று, தன் பதவியை ராஜினாமா செய்தார். சிவராஜ் சிங் சவுஹான் பதவியேற்றபின், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றிபெற்றார்.
மார்ச் 23: கோவிட்-19 தொற்று நோயால் உலகம் முழுவதும் 3,39,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றுநோயால் உலக நாடுகளில் 14,703 பேர் உயிரிழந்தி ருக்கின்றனர். இதுவரை, 99, 014 பேர் இந்த நோயிலிருந்து மீண்டி ருக்கின்றனர். இந்தியாவில் 425 பேர் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மார்ச் 31 வரை, மக்கள் அவசிய மில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 24: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் குறைப்பதற்காக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஊரடங்கு உத்தரவை மக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது.
மார்ச் 24: பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 232 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ 2019 ஆகஸ்டில் நீக்கியபோது, அம்மாநிலக் கட்சித் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது. மற்றொரு முதல்வரான மெகபூபா முப்தி இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார்.
மார்ச்.24: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த 2020 ஒலிம்பிக்-பாராலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக 2021 கோடைக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக்குடன் கலந்துரையாடிய பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார். 124 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில், ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை.
மார்ச் 25: கரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் 7,22,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றுநோயால் 33,972 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1,51,514 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 1121 பேர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். 95 இந்தியர்கள் நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
மார்ச் 27: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த பிரிட்டன் அமைச்சரவையைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஜப்பானிய ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து அறிவித்துள்ளார்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான தடகள வீரர்களின் தேர்ச்சி 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பொருந்தும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
மார்ச் 30: சூரிய ஒளியலை அளவீட்டு விண் பரிசோதனைத் (Sun Radio Interferometer Space Experiment - SUNRISE) திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. சூரியத் துகள் ராட்சத புயல்களை சூரியன் எப்படி உருவாக்குகிறது என்பதை ஆய்வுசெய்வதற்காக இந்தத் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
மார்ச் 31: ‘கோவிட்19’ நோய்த்தொற்று, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக மக்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நெருக்கடி என்று ஐ.நா. தலைவர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் இன்னும் வலிமையான, மேம்படுத்தப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். சுகாதார நெருக்கடியாக மட்டும் அணுகாமல், அரசியல் வேறுபாடுகளை மறந்து மனித நெருக்கடியாகப் புரிந்துகொண்டு உலக நாடுகள் கரோனாவை எதிர்த்துப் போராட வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மார்ச் 31: சவூதி அரேபியா தலைமை வகித்த ‘ஜி20’ உலக நிதி அமைச்சர்களின் மெய்நிகர் (Virtual) மாநாடு நடைபெற்றது. இந்தியா சார்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். கரோனா காரணமாக முதன்முறையாக மெய்நிகர் வடிவில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் தொடர்ந்து உரையாடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. ‘கோவிட்-19’ காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கான ‘ஜி20 செயல் திட்ட’த்தை உருவாக்கும் பணியை நிதி அமைச்சர்கள் தொடங்கியுள்ளார்கள்.
மார்ச் 31: ‘கோவிட்-19’ பரவல் காரணமாக கிழக்காசிய-பசிபிக் பகுதிகளில், 1.1 கோடி பேர் ஏழைகளாவார்கள் என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தக் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் 12,74,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 69,471 பேர் உயிரிழந்துள்ளர். நோய்த்தொற்றிலிருந்து 2,64,834 பேர் மீண்டுள்ளனர். கிழக்காசிய-பசிபிக் பகுதிகளில் வளர்ச்சி 2.1 சதவீதமாகக் குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது. சுகாதாரத் துறையில் அதிக முதலீடுகளைச் செய்வதற்கு உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.

KALVISOLAI CURRENT AFFAIRS - FEBRUARY 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி 2020
பிப்ரவரி 1: 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டில் கல்விக்காக ரூ. 99,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீடும் அறிமுகமாகவிருக்கிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகம், தேசிய தடவியல் பல்கலைக்கழகம் ஆகியவை புதிதாகத் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2: ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை எட்டாம் முறையாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச் கைப்பற்றியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டி இது. விம்பிள்டன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகியவை மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்.
பிப்ரவரி 5: உலகளாவிய புதுமைக் கொள்கை மையம், சர்வதேச அறிவுசார் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற 53 நாடுகளில், நான்கு இடங்கள் பின்னுக்குச் சென்ற இந்தியா 40-ம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
பிப்ரவரி 5: கர்நாடக மாநில அரசு, மக்கள் சேவைத் (ஜனசேவகா) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தே பெற முடியும் என அறிவித்துள்ளது கர்நாடக அரசு. சில சேவைகளை டிஜிட்டல் சேவைகளாக மாற்றவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
பிப்ரவரி 5: 2014 முதல் 2018 வரை, நாட்டில் 233 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார். அதிகபட்சமாக அசாம், ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் 37 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 2018-ல் 70 பேர், 2017-ல் 51 பேர், 2016-ல் 35 பேர், 2015-ல் 30 பேர், 2014-ல் 47 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை மத்தியப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அம்மாநில அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசமும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிப்ரவரி 5: தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2017-18-ம் ஆண்டின் தொழிலாளர் வேலைவாய்ப்பு சதவீதம் 36.9 ஆகவும், வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.1 ஆகவும் இருப்பதாகத் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 6: ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல் அமைச்சர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகிய இருவர் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (PSA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்க அனுமதிக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிப்ரவரி 6: ஆண்டுதோறும் கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 48 மணிநேரம் நடைபெறும் ‘சாகர் கவச் ஆப்ரேஷன்’ தமிழ்நாட்டில் நடைபெற்றது. தரைமார்க்கமாகவும், கடல்மார்க்கவும் தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான முன்னோட்டமாக இந்த ‘சாகர் கவச்’ ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
பிப்ரவரி 11: டெல்லியில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 62 இடங்களில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி முதல்வராகப் (பிப். 16 அன்று) பதவியேற்றுள்ளார்.
பிப்ரவரி 13: அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் பங்களிப்பு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது குற்ற வழக்குகள் ஏதாவது நிலுவையில் இருந்தால், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 13: தேபாஷிஷ் பண்டா, புதிய நிதிச் செயலாளராக மத்திய நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிச் செயலராக இருந்த ராஜிவ் குமார் ஓய்வுபெறுவதால் புதிய செயலராக தேபாஷிஷ் பண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 13: பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக ரிஷி சுனக் பெயரை அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன். சஜித் ஜாவித் ராஜினாமா செய்ததால், புதிய நிதியமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மருமகன்.
பிப்ரவரி 14: போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபலோ டிசோசா அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு மூன்று நாட்கள் வருகைதந்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
பிப்ரவரி 14: தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் பத்தாம் பட்ஜெட் இது. 2018-19 நிதியாண்டில், 8.17 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2019-20-ல், 7.27 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 34,181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2017-ல் தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்ததால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று திமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. தகுதிநீக்கம் தொடர்பான இந்த வழக்கில், அவைத்தலைவர் தனபால் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.
பிப்ரவரி 15: 2019-20-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பூமியைக் கண்காணிக்கும் 10 செயற்கைக் கோள்களை 2020-21-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-1’ இடம் பெற்றுள்ளது. 18 தகவல் தொடர்ப்பு செயற்கைக் கோள்கள், 19 தேசிய பூமி கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், 8 கடல் கண்காணிக்கும் செயற்கைக் கோள்கள் தற்போது சேவையில் இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17: குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற ஐ.நா.வின் 13-ம் வலசை போகும் பறவை இனங்கள் மாநாட்டில், ‘2020-இந்தியப் பறவைகளின் நிலை’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், ஆராய்ச்சிக்கு எடுத்துகொள்ளப்பட்ட 867 பறவை இனங்களுமே அருகி வருவது தெரியவந்துள்ளது. இவற்றில், 101 பறவையினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
பிப்ரவரி 18: உலகின் அதிகமாகப் பேசப்படும் 7,111 வாழும் மொழிகளின் ஆண்டறிக்கையை ‘எத்னோலாக்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உலகில் 113.2 கோடிப் பேர் பேசும் மொழியாக ஆங்கிலம் முதலிடத்திலும், 111.7 கோடிப் பேர் பேசும் மொழியாக மண்டாரின் (சீன மொழி) இரண்டாம் இடத்திலும், 61.5 கோடிப் பேர் பேசும் மொழியாக இந்தி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. 22.8 கோடிப் பேர் பேசும் வங்க மொழி ஏழாம் இடத்திலும், 8.1 கோடிப் பேர் பேசும் தமிழ் மொழி பத்தொன்பதாம் இடத்திலும் இருக்கின்றன.
பிப்ரவரி 18: டைம்ஸ் உயர் கல்வி தரவரிசைப் பட்டியல் லண்டனில் வெளியாகியுள்ளது. ‘வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பல்கலைக்கழகத் தரவரிசை 2020’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில், முதல் 100 இடங்களில், இந்தியாவின் 11 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. 47 நாடுகளைச் சேர்ந்த 533 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், 16-ம் இடத்தை பெங்ளூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 56 இந்தியப் பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 18: லாரியஸ் விளையாட்டுத் தருண விருது (2000-2020) சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இந்த விருது விழா நடைபெற்றது. 2011-ல், இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றபோது, அணியினர் சச்சினைத் தோளில் தூக்கி மைதானத்தை வலம்வந்து வெற்றியைக் கொண்டாடினர். இந்தத் தருணத்தைச் சிறந்த விளையாட்டுத் தருணமாக லாரியஸ் தேர்ந்தெடுத்துள்ளது.
பிப்ரவரி 18: வியாழன் கோளின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளில் 0.25 சதவீதம் நீர் இருப்பதாக 2011-ல் நாசா அனுப்பிய ஜுனோ (Juno) திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ இதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளால், முன்னர் நினைத்ததைவிட வியாழனில் அதிக நீர் இருப்பது தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 20: மாற்று மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோ (AYUSH) ஆகியவற்றின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கும் நீட் நுழைவுத் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 20: காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (PSAZ) அறிவிக்கும் மசோதாவைத் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில், திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் இணைக்கப்படவில்லை.
பிப்ரவரி 23: நாட்டின் தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்ற வன்முறையில் 42 பேர் பலியாகியிருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அமைதிவழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக 148 குற்றப்பத்திரிகைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 630 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 23: சர்வதேச நாணய நிதியத்தின் அக்டோபர் உலகப் பொருளாதாரப் பார்வையின்படி, உலகின் ஐந்தாம் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை உலகின் முதல் நான்கு பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன.
பிப்ரவரி 25: 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்தல், 2020 ஏப்ரலில் ஓய்வுபெறும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர் களின் இடங்களுக்கு நடைபெற விருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 26 அன்றே நடைபெறுகிறது.
பிப்ரவரி 25: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்த வருகையின்போது, ரூ. 21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கிடையில் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிப்ரவரி 25: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. ஜனநாயக ஆதரவு இயக்கமான ‘அரேபிய வசந்த’ புரட்சியால் வெளியேற்றப்படும்வரை, முப்பது ஆண்டுகள் அவர் எகிப்து அதிபராகப் பதவிவகித்துள்ளார்.
பிப்ரவரி 26: ‘2020 ஹுருன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகச் செல்வந்தர்களின் இந்தப் பட்டியலில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் முதல் இடத்தில் உள்ளார். பிரெஞ்சு ‘எல்விஎம்எச்’ நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
பிப்ரவரி 26: ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதாகும் மரியா ஷரபோவா, ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிரமான காயங்களால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27: மியான்மர் அதிபர் உ வின் மைன்ட் (U Win Myint) இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்தார். இந்த வருகையின்போது, இந்தியா - மியான்மர் இடையே ஆற்றல், உள்புற கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Subscribe to:
Posts (Atom)